உலக செய்திகள்
1. பிரிட்டிஷ் அரசியல்வாதியும், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவருமான போரிஸ் டி பிஃபெல் ஜான்சன்,பிரிட்டனின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய செய்திகள்
2. மெய்நிகர் நாணயங்கள் மீதான அமைச்சகங்களுக்கிடையே குழுவானது “மெய்நிகர் நாணயத்தின் தடை & அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணய ஒழுங்குமுறை மசோதா, 2019” என்பதுடன் சேர்த்து தனது அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளது.
3. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பாதுகாப்புக் கண்காட்சியின் 11வது பதிப்பானது 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முதன்முறையாக உத்திரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் கருத்துரு, “இந்தியா – வளர்ந்து வரும் பாதுகாப்பு உற்பத்தி மையம்” என்பதாகும்.
4. “இந்தியாவின் லேசான புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்” என்று அழைக்கப்படும் பாபா கவாச் புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச போலீஸ் எக்ஸ்போ 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
5. மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆளுநராக லால் ஜி தாண்டன் , உத்திரப் பிரதேச மாநிலத்தின் ஆளுநராக ஆனந்தி பென் படேலும், மேற்கு வங்காளம் மாநிலத்தின் ஆளுநராக ஜெகதீப் தங்கரூம், பீகார் மாநிலத்தின் ஆளுநராக பாகு சவுகானும், நாகலாந்து மாநிலத்தின் ஆளுநராக RN ரவியும் மற்றும் திரிபுரா மாநிலத்தின் ஆளுநராக ரமேஷ் பைஸ்ஸும் நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு செய்திகள்
6. சர்வதேச கால்பந்து சம்மேளனம் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான FIFA உலகக் கோப்பை 2020 (10 வது பதிப்பு)- ஐ 10 ஆண்டுகளுக்குப் பிறகு நைஜீரியா நடத்தவுள்ளது.
முக்கிய தினங்கள்
7. ஜீலை 23 - தேசிய ஒளிபரப்பு தினம்(All India Radio – AIR ). AIR- ன் குறிக்கோள் “பகுஜன் ஹிட்டாயா பகுஜன் சுக்காயா” என்பதாகும்.