நடப்பு நிகழ்வுகள் ஜூலை 24, 2019





உலக செய்திகள் 

1. 2024-ம் ஆண்டு நிலவிற்கு வீராங்கனைகளை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்கு நாசா “ஆர்டெமிஸ்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

தேசிய செய்திகள் 

2. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

3. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திராயன் -2 விண்கலம். அமெரிக்கா, ரஷ்யா, சீனா நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவின் பரப்பில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்கும் முதல் முயற்சியில் இந்தியா ஈடுபடுகிறது. இது விண்வெளியின் மூன்று வெல்வேறு சுற்றுவட்ட பாதையில் செயற்கை கோள்களை செலுத்தவுள்ளது. ஆர்பீட்டர் எடை ஸ்ரீ 2379 கிலோ, லேண்டர் (விக்ரம்) ஸ்ரீ 1471 கிலோ மற்றும் ரோவர் (பிரக்யான்) ஸ்ரீ 27 கிலோ ஆகும்.

4. ஆர்.டி.ஐ சட்டதிருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. “தகவல்” அறியும் உரிமைச் சட்ட (திருத்த) மசோதா-2019” ஆனது தகவல் ஆணையர்களின் நியமனம், பதவிக்காலம், ஊதியம் தொடர்புடையது.

5. ஹிமாச்சல் பிரதேசத்தில் புதிய ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு செய்திகள் 

6. காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை அஹிகா முகர்ஜி சாம்பியன் பட்டம் வென்றார்.



Previous Post Next Post