நடப்பு நிகழ்வுகள் ஜூலை 23, 2019





உலக செய்திகள் 

1. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான ‘ஹேண்ட்-இன்-ஹேண்ட்’ என்ற இராணுவப் பயிற்சி மேகாலயாவின் உம்ரோய் நகரில் நடைபெறவுள்ளது.

தேசிய செய்திகள் 

2. அங்கீகாரத்தில் தொடர்ச்சியாக 4 –வது முறையாக தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார ஆணையத்தின் (National Assessment and Accreditation Council – NAAC) புகழ்பெற்ற A++ தரவரிசை பெற்ற நாட்டின் முதலாவது தன்னாட்சி கொண்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரி ஆகும்.

3. சென்னையின் முதலாவது திடக் கழிவுகள் எரிப்பு உலை மணலியில் அமைக்கப்படவிருக்கின்றது. இதனை அடுத்து மாதாவரம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் இந்த உலை அமைக்கப்படவிருக்கின்றன.

4. தெலுங்கானா மாநில அரசு மற்றும் உலகப் பொருளாதார மன்றத்தின் நான்காவது தொழிற்துறை புரட்சிக்கான மையம் ஆகியவை இணைந்து “வானிலிருந்து மருத்துவம்” என்ற ஒரு திட்டத்தை அறிவித்துள்ளன.

5. மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற வெக்டர் பரவும் நோய்களை (VBD) தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் டெல்லியில் 3 நாள் பிரச்சாரமான ஜான் ஜக்ருக்தா அபியானைத் தொடங்கியது.

6. எலோன் மஸ்க்கின் மூளை – இயந்திர இடைமுகத்திற்கான புதிய தொழில் நிறுவனமான நியூராலிங்க்கானது ஒரு நபரின் மனதைப் படிக்கக் கூடிய வகையில் கம்பியற்ற பொருத்தப் படக்கூடிய சாதனத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது.

விளையாட்டு செய்திகள் 

7. ஒடிசாவில் நடைபெற்று வரும் 21வது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தங்கம் வென்றதன் மூலம் இந்தியா சாதனை படைத்துள்ளது.



Previous Post Next Post