உலக செய்திகள்
1. சர்வதேச காவல்துறை கண்காட்சி 2019 புதுடில்லியில் நடைபெற்றது.
தேசிய செய்திகள்
2. காவிரி ஆறு மாசுபடுவதில் இருந்து முழுமையாக மீட்டெடுக்க, "நடந்தாய் வாழி காவிரி" என்ற திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
3. தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1.11.1956-ம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில், ஆண்டு தோறும் நவம்பர் 1-ம்நாள் ‘தமிழ்நாடு நாள்’ என்ற பெயரில் கொண்டாடப்படவுள்ளது.
4. இலவச எரிவாயு இணைப்புத் திட்டத்திற்கு சர்வதேச எரிசக்தி ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது. “பிரதமர் உஜ்வாலா திட்டம்” மூலம் 4 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் நோக்கம் 2020-க்குள் 8 கோடி இலவச எரிவாயு இணைப்பு அளிப்பது ஆகும்.
5. அதிக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மாநிலங்கள் தரவரிசையில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. கர்நாடக மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
விளையாட்டு செய்திகள்
6. கஜகஸ்தான் அதிபர் கோப்பைக்கான சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஷிவ தாபா ஆடவர் 63 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார்.
இரங்கல்
7. தில்லி முன்னால் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்.