உலக செய்திகள்
1. இந்தியாவுடனான சம்ஜௌதா விரைவு ரயில் சேவையை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சிறப்புப் பிரிவை ரத்து செய்யும் இந்தியாவின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாகிஸ்தான் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தேசிய செய்திகள்
2. தேசிய மருத்துவ ஆணையத்தை ஏற்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ஒப்புதலை அளித்துள்ளார்.
3. குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, பாரதிய ஜன சங்கத்தின் தலைவர் நானாஜி தேஷ்முக், பாடகர் பூபேன் ஹஸாரிகா ஆகியோருக்கு நாட்டின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் நானாஜி தேஷ்முக், பூபேன் ஹஸாரிகா ஆகியோர் மறைவுக்குப் பிறகு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டு செய்திகள்
4. ஐரோப்பிய மாஸ்டர்ஸ் ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்று உலக மாஸ்டர்ஸ் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. தேசிய மாஸ்டர்ஸ் போட்டியில் பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஹாக்கி வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர்.
5. உலக வில்வித்தை (WA) அதன் வழிகாட்டுதல்களை மீறியதற்காக இந்திய வில்வித்தை சங்கத்தை இடைநீக்கப்பட்டுள்ளது.