நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 9, 2019






தேசிய செய்திகள் 

1. தமிழகம் முழுவதும்2 கோடி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க தமிழக பொது சுகாதார துறை ஏற்பாடு செய்துள்ளது.

2. 370-வது சட்டபிரிவு நீக்கி அரசாணை வெளியிட்டார் இந்திய குடியரசு தலைவர். இதன் மூலம் மற்ற மாநிலங்கைள போலவே ஜம்மு காஷ்மீருக்கு ஒரே தேசியக் கொடி, ஒரே அரசியலமைப்பு சட்டம் உறுதியாகியுள்ளது.

3. உத்கிருஷ்ட் திட்டத்தில் ஜல்பைகுரி ரயிலில் மேம்படுத்தப்பட்ட பெட்டிகள் இணைப்பு. இத்திட்டத்தின் கீழ், சென்னை சென்ட்ரலில் இருந்து ஜல்பைகுரிக்கு இயக்கப்படும் முதல் ரயிலாகும். “உத்கிருஷ்ட்” என்பது ரயில் பெட்டிகளை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு வகுத்த திட்டம் ஆகும்.

வர்த்தக செய்திகள் 

4. ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 0.35 சதவீதம் குறைக்கப்பட்டு 5.40 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல வர்த்தக வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 0.35 சதவீதம் குறைக்கப்பட்டு 5.15 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு செய்திகள் 

5. அதிக வருவாய் ஈட்டும் வீராங்கனை “போர்ப்ஸ்” பட்டியலில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து 13-ம் இடம் பெற்றுள்ளார். 15 வீராங்கனைகள் கொண்ட பட்டியலில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் முதலிடத்தில் உள்ளார்.

முக்கிய தினங்கள் 

6. ஆகஸ்ட் 8 - வெள்ளையனே வெளியேறு இயக்கம் புரட்சி தொடங்கிய நாள்.



Previous Post Next Post