நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 11, 2019






தேசிய செய்திகள் 

1. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை டாக்டர் விக்ரம் சரபாயின் நூற்றாண்டு விழாவில், விண்வெளி அறிவியல், பயன்பாடுகள் மற்றும் ஆராய்ச்சித் துறையில் தீவிரமாக பங்களித்த ஊடகவியலாளர்களை அங்கீகரித்து வெகுமதி அளிக்க இஸ்ரோ பத்திரிக்கைத் துறையில் இரண்டு வகை விருதுகளை வழங்கவுள்ளது.

2. மகாராஷ்டிராவின் 34 மாவட்டங்களில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்தவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 200 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

3. இந்தியாவின் முதல் நீருக்கடியில் ரயில் திட்டம் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் ஹீக்லி ஆற்றின் கீழ் தொடங்கப்பட உள்ளது என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.

விளையாட்டு செய்திகள் 

4. திடீர் திருப்பமாக தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (நாடாவின்) வரம்பின் கீழ் வருவதற்கு நாட்டின் செல்வாக்க மிகுந்த விளையாட்டு அமைப்பான பிசிசிஐ ஒப்புக் கொண்டுள்ளது.

முக்கிய தினங்கள் 

5. ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு அண்டும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி உலகின் பழங்குடி மக்களின் சர்வதேச தினமாக அனுசரிக்கிறது. இந்த மக்கள்தொகை குழுக்களின் தேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாள் கொண்டாடப்படுகிறது.




Previous Post Next Post