தேசிய செய்திகள்
1. நெகிழி பொருள் (பிளாஸ்டிக்) விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை தமிழகம் முழுவதும் அமலுக்கு வருகிறது.
2. 17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று (17.6.19) தொடங்குகிறது. மக்களவை இடைக்காலத் தலைவராக வீரேந்திர குமாரை குடியரசு தலைவர் பதவி பிரமானம் செய்து வைக்கிறார்.
3. சென்னை வானிலை ஆய்வு மையத்துக்கு உலக அளவிலான அங்கீகாரத்தை உலக வானிலை ஆய்வு நிறுவனம் வழங்கியுள்ளது.
4. இஸ்ரேல் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள “கோலன் ஹைட்ஸ்” என்ற யூதர்கள் குடியிருக்கும் குக்கிராமத்தின் பெயர் “ரமத் டிரம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
5. டென்ஸ்பாச்- யில் (நெதர்லாந்து) நடைபெற்ற உலகளவில் வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ரெக்கவர் பிரிவில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றது. சீனா அணி தங்கப்பதக்கத்தை வென்றது.
6. சீனியர் தேசிய ஸ்குவாஸ் சாம்பியன் பட்டத்தை ஜோஷ்னா சின்னப்பா வென்றார் இவர் 17-வது முறையாக பட்டம் வென்றார் . புவனேஸ்வரி குமாரியின் சாதனையை (16 முறை சாம்பியன்) முறியடித்துள்ளார்.
7. 2019-ம் ஆண்டிற்கான “மிஸ் இந்தியா” அழகி பட்டத்தை “சுமன் ராவ்” வென்றள்ளார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
முக்கிய தினங்கள்
8. ஜுன் 17 “உலகம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம்”. Theme – சுற்றுச்சூழல் பாதிப்பை முழுவதுமாக தடுக்க முயல்வோமானால் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஏற்படுவதை தடுக்கலாம்.