உலக செய்திகள்
1. நவம்பர் 30 முதல் டிசம்பர் 8 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள மெக்ஸிகோவில் நடைபெறும் 33-ஆவது குவாதலஜாரா சர்வதேச புத்தகக்கண்காட்சியில் இந்தியா, கௌரவ விருந்தினராக (Guest of Honour) நியமிக்கப்பட்டு;ள்ளது
2. நிலச் சீரழிவு மற்றும் பாலைவனமாக்கல் பிரச்சனைக்கு தீர்வு காண 2019 செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனமாக்கலுக்கான மாநாட்டின் (United Nations Convention to Combat Desertification – UNCCD) 14வது அமர்வை (COP- 14) இந்தியா முதன் முறையாக நடத்தவுள்ளது
3. 2021 ஆம் ஆண்டிலிருந்து தீங்கு விளைவிக்கும் ஒற்றைப் பயன்பாடுடைய நெகிழிப் பொருட்கள் தடை செய்யப்படும் எனக் கனடிய பிரதமர் ஐஸ்டின் ட்ரூட்டோ அண்மையில் அறிவித்துள்ளார்.
தேசிய செய்திகள்
4. காணாமல் போன செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை கண்டுபிடிக்க உதவும் “DIGICOP version2” என்ற செயலி தொடங்கி வைக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறையின் DIGICOP செயலியில் CCTNS என்ற புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
5. 2019 ஆம் ஆண்டு ஜுன் 17 முதல் ஜுன் 21 வரை கிம்பர்லி செயல்முறையின் கூட்டத் தொடர் சந்திப்பானது இந்தியாவினால் மும்பையில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
6. பாக்கிஸ்தான், லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீத்தை இடை- சேவைகள் புலனாய்வு துறையின் (ISI) இயக்குநராக நியமித்துள்ளது.
7. மத்தியப் பிரதேச மாநிலத்தின் பேதுல் மாவட்டத்தில் உள்ள பாஞ்சா கிராமம், சூரிய சமையலறையை மட்டுமே கொண்டுள்ள இந்தியாவின் முதல் கிராமமாக மாறியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
8. கேரி உட்லேண்ட் 119 வது US ஓபனை வென்றார். இரண்டு முறை நடப்பு சாம்பியனான ப்ரூக் கோய்ப்காவை தோற்கடித்து அவரது முதல் பட்டத்தை கைப்பற்றினார்.
முக்கிய தினங்கள்
9. ஜுன் 15 - உலக மூத்தோர் கொடுமை விழிப்புணர்வுத் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
10. ஜுன் 16 - வெளிநாட்டிலிருந்து குடும்பத்திற்கு பணத்தை அனுப்புதலுக்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகின்றது.