நடப்பு நிகழ்வுகள் ஜூன் 17, 2019







தேசிய செய்திகள் 

1. வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு ரூ.25 கோடியில் நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு அறிவித்தது. சர்வதேச வீட்டு வேலை தொழிலாளர்கள் தின விழாவில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் இவ்வறிவிப்பை வெளியிட்டார்

2. இந்தியாவை வரும் 2024-ம் ஆண்டுக்குள் ரூ.350 லட்சம் கோடி பொருளாதார சக்தியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்;பட்டுள்ளது என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்தார். 5வது நிதி ஆயோக் கூட்டம் டில்லியில் நடைபெற்றது.

3. சிஐசிஏ (CICA) வின் உச்சி மாநாடு தஜிகிஸ்தானில் நடைபெற்றது. இந்தியாவின் சார்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

4. இலக்கிய அமைப்பான சாகித்ய அகாதெமி இளம்படைப்பாளிகளுக்கான 2019-ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கர், யுவ சாகித்ய புரஸ்கர் விருது அறிவிக்க பட்டுள்ளது.பால சாகித்ய புரஸ்கர் – தேவி நாச்சியப்பன், யுவ சாகித்ய புரஸ்கர் – சபரி நாதன், சாகித்ய அகாதெமி தலைவர் – சந்திர சேகர் கம்பர்

விளையாட்டு செய்திகள் 

5. எப்.ஐ.எச் ஆடவர் ஹாக்கி சீரிஸ் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

6. ஃபிபா அமைப்பு உலக கால்பந்து தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் பெல்ஜியம் முதல் இடத்தையும் உலக சாம்பியன் பெற்ற பிரான்ஸ் அணி 2-ம் இடத்தையும் இந்தியா – 101 வது இடத்தையும் பெற்றுள்ளது.

முக்கிய தினங்கள் 

7. ஜுன் 15 உலக காற்று தினம். கருத்துரு "Less co2 and cleaner air"

8. 20வது கார்கில் விஜய் திவாஸ் ஜுன் 25 முதல் 27 வரை கொண்டாடப்படவுள்ளது. கார்கில் போர் வெற்றியை கொண்டாடும் விதமாக கடைபிடிக்கப்படுகிறது. கருத்துரு “Remember Rejoice and Renew”




Previous Post Next Post