நடப்பு நிகழ்வுகள் மே 19, 2019






உலக செய்திகள் 

1. வங்க தேசத்தில் உள்ள ரோஹின்யா அகதிகளுக்கு முதல் முறையாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக ஐநா அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது. ரோஹின்யா அகதிகள் என்பவர்கள் மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்கு இடம் பெயர்ந்தவர்கள்.

தேசிய செய்திகள் 

2. உலக  அளவில் மிக குறைந்த வயதில் அபாகஸ் என்ற கணித முறையின் 8 படிநிலைகளை வென்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த கலைமதி(6 வயது) பெற்றுள்ளார்.

3. மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தியர்களுக்கு 16% இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

4. ஆதார் விவரங்களை பாதுகாப்பாக வைக்க UIDAI ஆதார் லாக்கர்(Aadhar Locker) என்ற முறையை அறிமுகப்படுத்திள்ளது.

5. GSI நிறுவனம் வெளியிட அறிக்கையில் கிராபைட் அதிகம் உள்ள மாநிலத்தில் அருணாச்சல பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

6. ஆசியாவில் ஒரே பாலின திருமணத்தை முதல் முறையாக தைவான் நாடு சட்டபூர்வமாகியுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 

7. சூரியனின் வெளிப்பகுதியை ஆராய்வதற்கான மிஷன் ஆதித்யா என்ற திட்டத்தை 2020  ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

விளையாட்டு செய்திகள்   

8. இந்திய நீச்சல் சமேளனத்தின் தலைவராக முதல் முறையாக தமிழகத்தை சேர்ந்த R N ஜெயப்ரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள் 

9. மே 18 - சர்வதேச அருங்காட்சியக தினம் 

10. மே 17 - உயர் இரத்த அழுத்த தினம் 








Previous Post Next Post