நடப்பு நிகழ்வுகள் மார்ச் 12,2019

தேசிய செய்திகள்
1. மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக ‘சீர்மரபினர் சமுதாயத்தினர்’ என்ற பெயரை ‘சீர்மரபினர் பழங்குடியினர்’ என மாற்றி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
2. எல் சால்வாடர் நாட்டிற்க்கான இந்திய தூதுவராக எஸ்.முபாரக் நியமிக்கப்பட்டுள்ளார்
3. பிரதமர் நரேந்திர மோடியின் செயலராக பாஸ்கர் குல்பே மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4. இந்திய பெருங்கடல் எல்லைகளில் பாதுகாப்பை அதிகரிக்க, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், பிரெஞ்சு விண்வெளி மையத்துடன் இணைந்து புதிய செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
5. மத்தியப் பிரதேசத்தில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு (OBC) மக்களுக்கு 27% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டதை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது.
6. ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற உலகின் முன்னணி சுற்றுலா வர்த்தக காட்சியான “ITB Berlin 2019” நிகழ்வில் ‘TV Cinema Spot’ பிரிவில், இந்தியாவிற்கு “Golden City Gate Tourism Awards 2019” என்ற சர்வதேச விருதின் முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
7. NMTMBS எனப்படும் நகர்வுத்திறன் மற்றும் பேட்டரி சேமிப்பு மாற்றத்திற்கான தேசியத் திட்டம் (National Mission on Transformative Mobility and Battery Storage), தலைவராக “அமிதாப் காந்த்” நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய தினங்கள்
8. தேசிய நோய்த்தடுப்பு நாள் – மார்ச் 10 (National Immunisation Day)
Previous Post Next Post