உலக செய்திகள்
- தைவானின் அதிபர் தசாய் இங்-வென் நாட்டின் புதிய பிரதமராக சூ தசெங் – சாங்-ஐ நியமித்துள்ளார்.
தேசிய செய்திகள்
- மகாராஷ்டிரா சட்டசபை மற்றும் செயலகத்தை உள்ளடக்கிய பத்திரிக்கையாளர்கள் சங்கமான மந்த்ராலயம் மற்றும் விதிமண்டல் வர்த்தகர் சங்கம் இணைந்து, மூத்த பத்திரிக்கையாளர் தீனு ராந்திவேக்கு (93), வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.
- ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் 133 ஒன்றியங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டம் என்கிற 100 நாள் வேலை, 150 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சென்னை தீவுத்திடலில் 45வது இந்திய சுற்றுலா & தொழில் பொருட்காட்சி ஜனவரி 9 அன்று தொடங்கியுள்ளது. இதன் கருப்பொருள் “Tourism and the Digital Transformation”.
- டெல்லியில் CBI இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் (Nageswara Rao) நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு செய்திகள்
- சஹாரா போர்ஸ் இந்தியா அகாடமியை சேர்ந்த ஜெகன் தர்வாலா, நூரம்பர்க் சுற்றில் நடந்த FIA பார்முலா 3 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற முதல் இந்தியராக மாறியுள்ளார்.
- விசாகப்பட்டினத்தில் நடந்த சீனியர் தேசிய பெண்கள் சாம்பியன்ஷிப்பின் 78 கி.கி., எடைப்பிரிவில் இமாச்சலப் பிரதேச காவல்துறையின் 5வது இந்திய இருப்பு படைப்பிரிவைச் (Indian Reserve Battalion – IRB) சேர்ந்த பெண் தலைமைக்காவலர் ராணி, தங்கம் வென்றுள்ளார்.
- பிரிட்டனைச் சேர்ந்த உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே (Andy Murray) ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளார்.