தேசிய செய்திகள்
- கர்நாடக தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.
- அமைதிக்கான காந்தி விருதை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.இதில் 2015ம் ஆண்டுக்கான காந்தி விருது, விவேகானந்த கேந்திரத்துக்கும் (கன்னியாகுமரி) 2016ம் ஆண்டுக்கான காந்தி விருதுக்கு அக்ஷய பாத்திரம் அறக்கட்டளை மற்றும் சுலப் இன்டர்நேஷனல் ஆகிய இரு அமைப்புகளுக்கும் 2017ம் ஆண்டுக்கான காந்தி விருது ஏகாய் அபியான் அறக்கட்டளைக்கும் 2018ம் ஆண்டுக்கான காந்தி விருது யோஹெய் சசாகவா அமைப்புக்கும் வழங்கப்படவுள்ளது
- லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டைம்ஸ் உயர்கல்வி நிறுவனம் 2019ம் ஆண்டின் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
- டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ரூ.3,600 கோடி செலவில், நாட்டில் 13 புதிய மத்தியப் பல்கலைக்கழகங்களை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- காசநோயால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியலை (2019) மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் உத்திரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
- மாற்றுத்திறனாளிகள் தேர்வுக்குச் செல்லும்போது, சொந்த உதவியாளரை (ஸ்கிரைப்) அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
- சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) புதிய தலைமை செயல் அலுவலராக சிங்கப்பூரின் மானு சாஹ்னி நியமிக்கப்பட்டுள்ளார்.
- டெல்லியில் நடைபெற்ற 17வது டெல்லி சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் சென்னையைச் சேர்ந்த சிறுவன் குகேஷ் (12 வயது) சாம்பியன் பட்டம் வென்றார்.