உலக செய்திகள்
- 2019ம் ஆண்டுக்கான ஆப்பிரிக்கா கப் ஆப் நேஷன்ஸ் போட்டிகளை எகிப்து நடத்த உள்ளது, என்று ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பின் (CAF) தலைவர் அஹ்மத் அறிவித்துள்ளார்.
தேசிய செய்திகள்
- ஹாட் ஸ்டார் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி அஜித் மோகன், முகநூல் (Facebook) இந்தியா நிறுவனத்தின் புதிய துணைத் தலைவராகவும் மேலாண் இயக்குநராகவும் அதிகாரப் பூர்வமாக பதவியேற்றுள்ளார்.
- கேரள பிரவாசி பாரதிய திவாஸ் அமைப்பு, நடப்பாண்டின் சிறந்த மனிதருக்கான விருதுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவர் மு.க. ஸ்டாலினை தேர்வு செய்துள்ளது.
- உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகமானது, UDAN – 3 திட்டத்தின் கீழ் அந்தமான் தீவுகளில் கடலில் தரையிறங்கும் விமானங்களை இயக்க அனுமதியளித்துள்ளது.
- ஆந்திரப்பிரதேசத்தின் போலாவரம் திட்டமானது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
- 2019ம் ஆண்டின் குழந்தைப் பாதுகாப்பிற்கான தேசிய ஆலோசனையின் முதல் பதிப்பு, புது டெல்லியின் இந்தியா வாழ்விட மையத்தில நடத்தப்பட்டது.
- இந்தியாவின் தேசிய அங்கீகார அமைப்பான NABCB ஆனது, ஆசிய பசிபிக் பிராந்தியங்களில் உள்ள OHSMS சான்றிதழ் அளிக்கும் அமைப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் திட்டத்திற்கு, சமமான ஒரு இடத்தைப் பிடித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
- 2019ம் ஆண்டுக்கான ஆப்பிரிக்கா கப் ஆப் நேஷன்ஸ் போட்டிகளை எகிப்து நடத்த உள்ளது, என்று ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பின் (CAF) தலைவர் அஹ்மத் அறிவித்துள்ளார்.
- லிவர்புல்லின் முகமது கலாவிற்கு இரண்டாவது முறையாக 2018ம் ஆண்டிற்கான ஆப்பிரிக்க கூட்டமைப்பு கால்பந்து வீரர் விருது செனகலில் வழங்கப்பட்டுள்ளது.