உலக செய்திகள்
- 10 –வது “உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடானது”, அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஜூலை 4, 2019 அன்று நடைபெறவுள்ளது.
- நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள, உலகின் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் பட்டியலில் இந்தியாவின் ஹம்பி (கர்நாடகா) இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
- அமெரிக்காவுக்கான இந்திய தூதராக “ஹர்ஷவர்தன் ஷரிங்” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய செய்திகள்
- Beti Bachao Beti padhao (பெண் குழந்தைகளை பாதுகாப்போம் மற்றும் கற்பிப்போம்) என்ற திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாவட்டமாக திருவண்ணாமலை (தமிழகம்) தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.
- ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், அம்மாநிலத்தின் மக்களுக்கு இலவசமாக LED விளக்குகளை வழங்குவதற்காக “ஆமா காரே LED” (Ama Ghare LED) என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
- “புவி அரசியல் மற்றும் புவியுக்திசார்” மாநாடான “ரைசினா உரையாடலின்” (Raisina Dialogue) 4-வது பதிப்பு புதுடெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் நடத்தப்பட்டது.
- ஆக்ரா (உத்திரப்பிரதேசம்) நகருக்கு தண்ணீர் வழங்குவதற்காக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி “Gangaijal Project” என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார்.
விளையாட்டு செய்திகள்
- சிட்னி சர்வதேச டென்னீஸ் போட்டியில், செக் நாட்டைச் சேர்ந்த பெட்ரோ குவிடோவா (Petra Kuvitova) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இப்போட்டியானது ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்றது.