உலக செய்திகள்
- ஆசியா – பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கான (APEC – Asia-Pacific Economic Cooperation) ஆசியா – பசிபிக் பொருளாதாரக் கூட்டிணைவின் 2018ஆம் ஆண்டிற்கான உச்சி மாநாடானது சமீபத்தில் பப்புவா நியூகினியாவின் போர்ட் மோர்ஸ்பியில் நடத்தப்பட்டது.
தேசிய செய்திகள்
- லடாக்கின் ஹென்லியில் உள்ள இந்திய வானியல் ஆய்வு மையத்தில் அமைந்துள்ள, நோவா வெடிப்பை ஆய்வு செய்யும் திட்டத்தின் தொடர்ச்சியான, 0.7 மீட்டர் அளவுடைய GROWTH – India தொலைநோக்கியானது முதன்முறையாக தனது கண்டுபிடிப்பை பதிவு செய்துள்ளது.
- இந்தியக் குடிமைப்பணி அதிகாரியான ஜலால் ஸ்ரீவஸ்தவா இந்தியாவின் உள்நாட்டு நீர்வழி ஆணையத்தின் (Inland Waterways Authority of India – IWAI) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- புதுடெல்லியில் டாக்டர் இராஜேஷ் பட் என்பவரால் எழுதப்பட்ட : “காஷ்மீர் வானொலி – அமைதி மற்றும் போர் காலங்களில்” என்ற புத்தகத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிந்தேந்திர சிங் வெளியிட்டுள்ளார்.
- சகோதரத்துவம், பன்முகத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் இந்தியாவின் முதலாவது “தேசிய மத நல்லிணக்க நிறுவனத்தை” இந்திய அரசு அமைக்க உள்ளது.
- தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் சிறப்பு படைகளுக்கு இடையேயான “வஜ்ரா பிரகார்” என்னும் 2018-ம் ஆண்டின் சிறப்பு பயிற்சியானது, இராஜஸ்தானின் பிகானிரில் உள்ள மகாஜன் ஆயுதப்படை தளத்தில் தொடங்கியுள்ளது.
- காவல்துறை தகவல் தொடர்புகளை நவீனப்படுத்துவதற்கான, அனைத்து இந்திய காவல்துறை தலைவர்களின் தகவல் தொடர்பு மாநாடானது புதுடெல்லியில் நடைபெற்றது.