உலக செய்திகள்
- ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு, இரு தரப்புக்கும் இடையே தொடர வேண்டிய உறவு தொடர்பான வரைவு ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
- உலகளாவிய இணையதள அமைப்பான ICANN என்ற அமைப்பால் ஆதரிக்கப்படும் UASG (Universal Acceptance Steering Group) என்ற அமைப்பானது ராஜஸ்தானின் முதல்வர் வசுந்ரா ராஜே-வுக்கு ‘உலகளவில் ஏற்புடைய சிந்தனைத் தலைவர்’ என்ற விருதை வழங்கியுள்ளது.
- சர்வதேச காவல் துறையான இன்டர்போல் (Interpol) அமைப்பின் புதிய தலைவராக, தென்கொரிய நாட்டைச் சேர்ந்த “சிம் ஜோங் யாங்” என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- பிரிட்டிஷ் நடிகை மில்லி பாபி பிரவுன் (வயது 14) மிக இளம் வயதில் யுனிசெப் (UNICEF) நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். (Youngest – ever UNICEF Good will Ambassador).
தேசிய செய்திகள்
- இந்தியா – ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையே முதலீட்டை அதிகரித்தல், வர்த்தகங்களை ஊக்குவித்தல் மற்றும் கலாச்சாரங்களைப் பரிமாற்றம் செய்தல் ஆகிய நோக்கங்களுக்காக, இந்தியா – ஜப்பான் வர்த்தக குழுவின் 2 நாள் அளவிலான முதல் “கொன்னிச்சி வா புனே திருவிழா” மகாராஷ்டிராவின் புனேவில் நடத்தப்பட்டது.
- இந்தியாவின் முதலாவது திறன் மேம்பாட்டு பல்கலைக் கழகமான ஸ்ரீ விஸ்வகர்மா திறன் மேம்பாட்டு பல்கலைக் கழகத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
- குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு (கியாஸ்) வினியோகத் திட்டத்தின் 9வது சுற்று ஏலத்தின் கீழ் 129 மாவட்டங்களில் உள்ள நகரங்களில் குழாய்கள் மூலம் வீட்டு சமையல் அறைகளுக்கே சமையல் கியாஸ் வினியோகம் செய்வதற்கான திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்.