உலக செய்திகள்
- ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) – 2018 ஆம் ஆண்டின் ஆசிய சுற்றுச்சூழல் அமலாக்க விருதிற்காக வனவிலங்கு குற்றத் தடுப்பு கழகம் (WCCB – Wildlife Crime Control Bureau) மற்றும் அதன் அமலாக்கத் துறை தலைவர் S. ஷரத்தை தேர்ந்தெடுத்தது.
- ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP – United Nations Environment Programme) நிர்வாக இயக்குநராக இருந்த எரிக் சொல்ஹெய்ம் பதவி விலகியதையடுத்து, UNEP – ன் தற்காலிக இயக்குநராக தான்சானியா நாட்டைச் சேர்ந்த “ஜாய்சி முசியா” நியமிக்கப்பட்டுள்ளார்.
- மொராக்கோ நாடானது தனது “முகமது – VI – B” என பெயரிடப்பட்டுள்ள இரண்டாவது புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.
தேசிய செய்திகள்
- பருவநிலை மாற்றத்தை எதிர் கொள்வதற்கான பாரீஸ் ஒப்பந்தத்தை திறம்பட செயல்படுத்துவதற்கு வளரும் நாடுகளுக்கு வளர்ச்சி அடைந்த நாடுகள் ஆதரவு அளிப்பதை வலியுறுத்துவதற்கான, பருவநிலை மாற்றம் மீதான பேசிக் (BASIC) நாடுகளின்
- மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் புத்தாக்கப் பிரிவின் புத்தாக்க நிறுவன ஆணையமானது புதுடெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது.
- பாலில் கலப்படம் இருந்தால் ஸ்மார்ட்போன் மூலமாகவே கண்டுபிடிக்கும் வசதியை ஹைதராபாத் ஐஐடி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
- சீனாவானது சூரியனின் மையப்பகுதியின் வெப்பநிலையான 15 மில்லியன் டிகிரி செல்சியஸ்-ஐ விட ஆறு மடங்கு அதிகமான அளவில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டக்கூடிய செயற்கை சூரியனை உருவாக்கியுள்ளது.
- சென்னை உயர்நீதிமன்றத்தின் 61வது நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு செய்திகள்
- புகழ்பெற்ற முதல் தர கிரிக்கெட் வீரரான வாசிம் ஜாபர், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் 11,000 ரன்களை கடந்த முதலாவது இந்திய வீரராக உருவெடுத்துள்ளார்.