உலக செய்திகள்
- இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ரிபப்ளிக் ஆப் குரோசியா(Republic of Croatia) நாட்டுக்கான இந்தியத் தூதராக அரிந்தம் பஷியை நியமனம் செய்துள்ளது.
- வட அமெரிக்க நாடுகளுக்கிடையே வர்த்தகத்தை அதிகப்படுத்தும் நோக்கத்திற்காக, அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகள் USMCA (United States, Mexico and Canada) என்றழைக்கப்படும் திருத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் மீது ஒரு உடன்படிக்கை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய செய்திகள்
- மத்திய பிரதேச மாநில அரசானது நிவாரி(Niwari) என்ற புதிய மாவட்டத்தை உருவாக்கியுள்ளது. நிவாரி மத்திய பிரதேசத்தின் 52வது மாவட்டம் ஆகும்.
- பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா(PMAY)-வை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களின் வரிசையில், உத்திரப் பிரதேச மாநில அரசானது 11 இலட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு வீடு கட்டித் தந்ததன் மூலம் முதலிடத்தில் உள்ளது.
- நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவிற்கு தேவையான மருத்துவ பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்குவதற்காக இந்தியா விமானப்படை சார்பில் C-130J மற்றும் C-17 என்னும் இரு வானூர்திகளும், இந்திய கடற்படை சார்பில் INS TIR, INS Sujatha மற்றும் INS Shardul ஆகிய பேரிடர் மீட்பு கப்பல்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
- நாட்டின் முதல் சோளத் திருவிழா(Corn Festival) மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சிந்த் வாராவில் நடைபெற்றுள்ளது. இத்திருவிழாவானது சர்வதேச நிகழ்வாகும்.
விளையாட்டு செய்திகள்
- 3வது இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், அர்ஜென்டீனாவில் உள்ள ப்யூனோஸ் ஏர்ஸ் நகரில் அக்டோபர் 06 முதல் 18 வரை நடைபெறவுள்ளது.
- புது டெல்லியில் நடைபெற்ற டிராக் ஆசிய கோப்பை சைக்கிள் போட்டியில், இந்தியாவானது 6 தங்கம், 5 வெள்ளி, மற்றும் 2 வெண்கலம் வென்று பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.
முக்கிய செய்திகள்
- உலக விலங்குகள் தினம் – அக்டோபர் 04