இந்திய செய்திகள்
- Economics Time (ET) நடத்திய 6வது கிராமப்புற உத்தி மாநாடு – 2018(ET Rural Strategy Summit – 2018) புது டெல்லியில் நடைபெற்றது.
- கனடாவின் பிரேசர் நிறுவனம், சிவில் சமூக மையத்துடன்(CCS – Centre for Civil Society) இணைந்து 2018ம் ஆண்டிற்கான பொருளாதார சுதந்திரக் குறியீட்டை (Economic freedom Index – 2018) வெளியிட்டது. உலகின் 162 நாடுகள் அடங்கிய இந்த பட்டியலில் இந்தியாவானது 96வது இடத்தில் உள்ளது.
- மகாராஷ்டிராவின் ரத்னகிரி, சிந்து துர்க் ஆகிய பகுதிகளில் விளையும் மாம்பழங்களின் அரசன் என்று அழைக்கப்படும் அல்போன்சா மாம்பழங்களுக்கு புவிசார் குறியீடு(Geographical Indication) அங்கீகாரம் கிடைத்துள்ளது.
- மகாராஷ்டிராவின் புனேயில் லோனி கல்சார் பகுதியில் உள்ள மகாராஷ்டிரா தொழில் நுட்ப நிறுவனத்தின் (MIT – Maharashtra Institute of Technology) உலக அமைதி பல்கலைக் கழக வளாகத்தில் (World Peace University) உலகின் மிகப் பெரிய குவிமாடம் (World Largest Dome) திறக்கப்பட்டுள்ளது.
- இந்திய தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (National Legal Services Authority of India – NALSA) நிர்வாகத் தலைவராக உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான மதன் பீமாராவ் லோகுரை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
- 2018ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு காங்கோவைச் சேர்ந்த மருத்துவர் “டெனிஸ் முக்வேஜாவும், ஈராக்கைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ‘நாடியா முராத்துக்கும்’ வழங்கப்பட்டுள்ளது.
- தெற்கு சூடான் நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஈவன் அட்டார் ஆதாஹா, என்பவருக்கு ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமைப்பின் 2018ம் ஆண்டிற்கான நான்சென் அகதி விருது (2018 NHCR Nansen Refugee Award) வழங்கப்பட்டுள்ளது.
வர்த்தக செய்திகள்
- உலகளாவிய வர்த்தக உத்திகளில் இந்தியாவின் எதிர்கால ஈடுபாட்டினை மதிப்பாய்வு (India’s Global Trade Strategy) செய்வதற்காக ‘சுர்ஜித் எஸ். பல்லா’ தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் குழு ஒன்றை (High Level Committee) வர்த்தக அமைச்சகமானது அமைத்துள்ளது.