தேசிய செய்திகள்
- சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாடு – 2018 (First Assembly of International Solar Alliance 2018), புதுடெல்லியில் விஞ்ஞான பவனில் அக்டோபர் 2 அன்று நடைபெற்றுள்ளது.
- இந்திரா (INDRA) பயிற்சி – இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளின் இராணுவங்கள் இணைந்து, உத்திரப் பிரதேச மாநிலம், பாபினா நகரில் 2018 நவம்பர் 18 முதல் 28 வரையில் கூட்டு இராணுவப் பயிற்சியில் (Indian – Russian exercise) ஈடுபடவுள்ளது. இந்த கூட்டு ராணுவப் பயிற்சிக்கு INDRA-2018 எனப் பெயரிடப்பட்டுள்ளது.
- இந்தியாவின் முதல் வெள்ளப் பெருக்கு மற்றும் ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு (FFEWS – Flood Forecasting and Early Warning System) கொல்கத்தா நகரில் தொடங்கப்பட்டுள்ளது.
- இமாச்சல் பிரதேச மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சூரியகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்குமுன் இமாச்சல் பிரதேச மாநில உயர்நீதி மன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக சஞ்சய் கரோல்-க்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்திய உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக நீதிபதி (ரஞ்சன் கோகோய் அக்டோபர் 03 அன்று பதவியேற்றுக் கொண்டார்.
- அமைதி மற்றும் அஹிம்சையை, தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்ததற்காக அமெரிக்காவின் மிக உயரிய விருதாக கருதப்படும் ‘அமெரிக்க பாராளுமன்றத்தின் தங்க பதக்கம்’ என்ற விருதை மகாத்மா காந்திக்கு வழங்குவது என அமெரிக்க பாராளுமன்றத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.