உலக செய்திகள்
- அரசியல் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகளில் பெண்களின் பங்களிப்பை சுட்டிக் காட்டும் விதமாக, முதன்முதலாக பெண் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டும் பங்கேற்ற மாநாடு கனடாவின் மாண்ட்ரியலில் நடைபெற்றுள்ளது.
தேசிய செய்திகள்
- 2019ம் ஆண்டிற்கான UNWTO (United Nations World Tourism Organization) அமைப்பிற்கான அதிகாரப்பூர்வ உலக சுற்றுலா தின கொண்டாட்டங்களை (செப்டம்பர் 27, 2019) இந்தியா நடத்தவுள்ளதை பிரபலபடுத்தும் விதமாக, ‘வியக்கத்தகு இந்தியா’ என்னும் கைப்பேசி செயலியையும், “வியக்கத்தகு இந்தியா சுற்றுலா வழிவகை செய்வோர் சான்றிதழ் திட்டத்தையும்” மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
- பெங்களுரின் இந்திய அறிவியல் கழகம் ஆனது, 2019 – ஆண்டின் டைம்ஸ் உயர் கல்வி உலகளாவிய பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகமாக (உலகளவில் 251-300 வரிசையில் உள்ளது) முதலிடத்தில் உள்ளது. ஐ.ஐ.டி. இந்தூர் ஆனது (உலகளவில் 351-400 வரிசையிலும்) நாட்டின் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
- மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளின் இரண்டு ஆண்டு கால கொண்டாட்டங்களை தொடங்குவதற்காக நெதர்லாந்தின் ஹேக் பகுதியில் உள்ள சமாதான அரண்மனையிலிருந்து குரோட் கெர்க் பகுதி வரையிலான “காந்தி நடைப் பயணத்தை” இந்தியா ஏற்பாடு செய்துள்ளது.
- மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் (MoHUA) அறிமுகப்படுத்தப்பட்ட ‘வாழ்வதற்கு உகந்த குறியீட்டு தரவரிசை’ மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரப் பிரதேசமானது முதலிடத்தில் உள்ளது.
முக்கிய தினம்
- சர்வதேச ஒட்டுமொத்த அணு ஆயுத ஒழிப்பு தினம் – செப்டம்பர் 26