உலக செய்திகள்
- காச நோயை (TB – Tuber Culosis) முற்றிலுமாக ஒழிக்க இந்தியாவுடன் அமெரிக்க இணைந்துள்ளது.
- பாரதீய வித்யா பவன் அமைப்பின் மூலம் வழங்கப்படும் மிக உயரிய விருதான தழிழ் மாமணி விருது எழுத்தாளர் ‘க. ரத்னம்’ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய செய்திகள்
- போக்குவரத்து வாகனங்களுக்கான உயிரி எரிவாயு (Compresses Bio-Gas) உற்பத்திக்கான ஆலைகளை அமைக்கும் புதிய திட்டத்தினை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதுடெல்லியில் அக்டோபர் 01, அன்று தொடங்கியுள்ளார்.
- நிலைத்த மேம்பாட்டு இலக்குகளை அடைவதில் இந்தியாவின் நடவடிக்கைகளை உறுதிபடுத்துவதற்காக, 2018-2022 க்கான நிலைத்த கட்டமைப்பு ஒப்பந்தம் நிதி ஆயோக் மற்றும் இந்தியாவில் உள்ள ஐ.நா. அலுவலகத்திற்குமிடையே கையெழுத்தாகியுள்ளது.
- இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சவுபாட்டியாவில் நடைபெற்று வந்த இந்திய இராணுவத்தினர் மற்றும் அமெரிக்க இராணுவத்தின் முதல் படைப் பிரிவைச் சேர்ந்த 23வது காலாட்படைப் பிரிவு ஆகிய இந்திய – அமெரிக்க கூட்டு இராணுவப் பயிற்சியான யுத் அபியாஸ் போர் பயிற்சி ஒத்திகை செப்டம்பர் 29 அன்று நிறைவுபெற்றுள்ளது.
- ஸ்மார்ட் சிட்டி எக்ஸ்போ இந்தியா என்ற பெயரிலான மூன்று நாள் நடைபெறும் சர்வதேச மாநாடானது இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் நடைபெற்றுள்ளது.
- இந்தியாவில் உள்ள ரயில்வே பாரம்பரிய இடங்களை இரயில்வே அமைச்சகம்- கூகுள் கலை, கலாச்சார நிறுவனம் இணைந்து டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் (The Railways Lifeline of a Nation) டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
- துருக்கியில் உள்ள சாம்சன் நகரில் நடைபெற்று வரும் உலக கோப்பை வில்வித்தை போட்டியில் பெண்களுக்கான ரிகர்வ் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
முக்கிய தினம்
- சர்வதேச மொழிபெயர்ப்பு நாள் – செப்டம்பர் 30 (International Translation Day)