RRB Tamil Current Affairs 29th September 2018

தேசிய செய்திகள்
  1. பிரதமர் நரேந்திர மோடி, இந்திய இராணுவத்தால் நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல் (surgical strike)-ன் இரண்டாவது ஆண்டு நினைவாக ஜோத்பூர் இராணுவ நிலையதில் “பராக்ரம் பர்வ்” கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார்.
  2. அகத்தியர் பிறந்த நட்சத்திரத்தின்படி டிசம்பர் 26ல் ‘சித்தா தினம்‘ கொண்டாட மத்திய அரசு அனுமதி அளித்து, நிதியும் ஒதுக்கியுள்ளது, இதற்கு 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  3. ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் நடைபெற்ற “ஸ்மார்ட் சிட்டி எக்ஸ்போ இந்தியா – 2018” என்ற மூன்று நாள் சர்வதேச மாநாட்டில் ஒடிஷாவின் புவனேஸ்வர் சிறந்த ஸ்மார்ட் சிட்டி விருதைப் பெற்றுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. குத்துச்சண்டை போட்டியில், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் மற்றும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற, மேரி கோம், பழங்குடியின மக்களின் துாதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை 7வது முறையாக வென்றது.
முக்கிய தினம்
  1. இருதய நோய்கள் குறித்தும், இருதயத்தை பாதுகாப்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சர்வதேச இருதய கூட்டமைப்பு சார்பில் செப்டம்பர் 29ம் தேதி, உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது.
Previous Post Next Post