RRB Tamil Current Affairs 28th September 2018

உலக செய்திகள்
  1. பிரிட்டன் தலைநகர் லண்டனில், சமீபத்தில், 21ம் நுாற்றாண்டின், சிறந்த, ‘ஐகான்‘ எனப்படும், சிறந்த முன்னோடியாக உள்ளவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில், தொழில் துறையில் சாதனை புரிந்ததற்காக, இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட, பிரபல தொழில் அதிபர், சஞ்சீவ் குப்தாவுக்கு விருது வழங்கப்பட்டது.
தேசிய செய்திகள்
  1. லோக்பால் அமைப்பின் தேடுதல் குழு தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் நிய மிக்கப்பட்டுள்ளார்.
  2. 2016 – 17ம் ஆண்டுக்கான, சுற்றுலாத் துறையில் சிறந்து விளங்கிய மாநிலங்களின் பட்டியலில், ஆந்திரா முதலிடம் பிடித்துள்ளது.
  3. காசநோயை முற்றிலும் ஒழிக்க, அமெரிக்காவுடன், இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
  4. சர்வதேச தரத்தில், கருப்பு பெட்டி மற்றும் செயற்கை நுண்ணறிவில் (Artificial Intelligence AI) இயங்கும் சி.சி.டி.வி போன்ற புதிய அம்சங்களுடன் கூடிய முதல் ஸ்மார்ட் ரயில் பெட்டிகளை “மாடர்ன் கோச் பேக்டரி – ராய் பரேலி” அறிமுகம் செய்துள்ளது.
  5. மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் ரஜினி கான்ட் மிஸ்ரா மற்றும் எஸ்.எஸ். தேஷ்வால் ஆகியோர் முறையே மத்திய துணை ராணுவப்படையான எல்லை பாதுகாப்புப் படை (BSF) மற்றும் சஷாஸ்ட் சீமா பால் (SSB) அமைப்பின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
விளையாட்டு செய்திகள்
  1. 16–வது ஐரோப்பிய கால்பந்து போட்டி 2020–ம் ஆண்டு பான் ஐரோப்பிய நாடுகளில் (12 நாடு) நடத்தப்படுகிறது.
முக்கிய தினங்கள்
  1. ரேபிஸ் வைரசால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் செப்., 28ல், உலக ரேபிஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
Previous Post Next Post