RRB Tamil Current affairs 24th October 2018

உலக செய்திகள்
  1. ஆஸ்திரேலியாவானது கல்வி, சாலைப் பாதுகாப்பு தொழில்நுட்பம், நகர்புற உட்கட்டமைப்பு, மீன்வளத்துறை மற்றும் விவசாயத் துறை ஆகியவற்றில் உள்ள வாய்ப்புகளை ஆராய வருகின்ற 2019ம் ஆண்டின் உலக முதலீட்டாளர் மாநாட்டில் தமிழகத்துடன் இணைந்து செயல்பட இருக்கின்றது.
  2. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையே கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO – Shanghai co operation Organization) உறுப்பு நாடுகளின் கல்வி அமைச்சர்களுக்கிடையேயான 7வது கூட்டம் கஜகஸ்தானின் தலைநகரான அஸ்தனாவில் நடைபெற்றது.
இந்திய செய்திகள்
  1. சுதந்திர போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1943ம் ஆண்டு ஆங்கிலேய அரசுக்கு எதிராக நிறுவிய ஆசாத் ஹந்த் அரசின் 75ம் ஆண்டு விழா டெல்லியில் அக்டோபர் 21ல் நடைபெற்றது.
  2. இந்தியாவின் முதல் புகையில்லா மாநிலமாக (India First Smoke free State – Kerala) கேரளா உருவாகியுள்ளது. தற்போது மாநிலம் முழுவதிலும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 100% LPG வாயு இணைப்புகளை வழங்கியுள்ளன.
  3. அமெரிக்க வாழ் இந்திய பெண் எழுத்தாளர் சுஜாதா கித்லா அவர்களுக்கு 2018ம் ஆண்டிற்கான சக்தி பட் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
  4. இந்தியன் ஸ்போர்ட்ஸ்: கன்வெர்சேசன்ஸ் அண்டு ரிப்ளகஷன்ஸ் (Indian Sports : conversation and Reflections) என்ற தலைப்பிலான ஆங்கில புத்தகம் விஜயன் பாலா(Vijayan Bala) அவர்களால் எழுதி வெளியிடப்பட்டுள்ளது.
  5. வட மத்திய இரயில்வேயானது (North Central Railways – NCR) இரண்டு கைப்பேசி செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  6. திருச்சி அருகே உள்ள உத்தமசீலி என்ற கிராமத்தில், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வின் போது 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாறைக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பாறைக் கல்வெட்டு மகிஷா சுரமர்த்தினி என்ற பெண் கடவுளின் உருவத்தை பிரதிபலிப்பதாக உள்ளது.

Previous Post Next Post