உலக செய்திகள்
- பிராந்தியப் பாதுகாப்பு நடைமுறையில் ஆசியான் நாடுகளுக்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் யுக்திசார் பேச்சுவார்த்தை மற்றும் நடைமுறை ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான 12வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு (ADMM – Asian Defence Ministers Meeting) மற்றும் 5வது ADMM Plus மாநாடு ஆகிய இரண்டும் சிங்கப்பூரில் நடைபெற்றுள்ளது.
- ஐக்கிய நாடுகள் தொழில் மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில், வளர்ச்சி திட்டங்களுக்கு முதலீடுகளை அதிக அளவில் பெற்றதற்கான விருதை, முதலீடு வளர்ச்சி அமைப்பான “இன்வெஸ்ட் இந்தியா” (Invest India) பெற்றுள்ளது.
இந்திய செய்திகள்
- அசாமின் துபரி என்ற பகுதியை மேகலாயாவின் புல்பரிக்கு இணைக்கும் இந்தியாவின் மிக நீண்ட ஆற்றுப்பாலமானது பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே 2026-27ல் அமைக்கப்படவுள்ளது.
- அணுக்கரு இணைவினை ஒரு ஆற்றல் மூலமாக பயன்படுத்த நேரடித் தொடர்பிற்கான புதுமையான கருத்துக்களை ஏற்படுத்தவும், இயற்பியலின் முக்கிய விஷயங்களையும், தொழில்நுட்பக் கூறுகளையும் விவாதிப்பதற்கான 27வது இணைவு ஆற்றல் மாநாடு (Fusion Energy Conference – FEC 2018) குஜராத்தின் காந்தி நகரில் நடைபெற்றது.
முக்கிய தினங்கள்
- உலக தகவல் வளர்ச்சி தினம் (World Development Information Day) – அக்டோபர்