RRB Tamil Current Affairs 23rd October 2018

உலக செய்திகள்
  1. ஸ்டீபன் ஹாக்கின்ஸின் கடைசிப் புத்தகமான “பெரு வினாக்களுக்கான சிறு விடைகள்” (Brief Answers to the Big Questions) என்ற புத்தகம் அவரது இறப்பிற்கு பின் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய செய்திகள்
  1. மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தீன்தயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம் (DAY – NRLM/Deendayal Antyodaya Yojana – National Rural Livelihood Mission) ஆனது லேடி இர்வின் கல்லூரியுடன் “ரோஷினி” (Roshni) அமைப்பை அமைப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  2. வரும் அக்டோபர் 26 அன்று மேகாலயாவில் “நீலப்புரட்சி : ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் மீன்வள மேலாண்மை” (Blue Revolution) எனும் முதன்மை திட்டம் தொடங்கப்படவுள்ளது.
  3. இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையேயான ‘தர்ம கார்டியன்’ (Dharma Guardian) என்ற முதல் கூட்டு இராணுவப் பயிற்சி 2018 நவம்பர் 1 முதல் 14 வரை மிசோரமின் வைரங்பேயில் நடைபெறவுள்ளது.
  4. திருச்சி மாநகராட்சியானது பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் (Smart City Mission) சூரிய ஒளியிருந்து மின்சாரத்தைத் தயாரிப்பதற்கான 5 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளிப்பூங்கா நிறுவுவதற்காக (Solar Park) தொழில் நுட்ப மற்றும் நிர்வாக தரப்பு ஒப்புதல்களை பெறவிருக்கின்றது.
  5. இந்தியாவின் மிக உயர்ந்த மூவர்ணக் கொடியை மும்பையில் உள்ள புகழ்பெற்ற மெஜஸ்டிக் ஹஜ் மாளிகையின் மேல்தளத்தில் மத்திய சிறுபாண்மை நல அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஏற்றி வைத்தார்.
விளையாட்டு செய்திகள்
  1. டென்மார்க்கின்-ஒடென்சி நகரில் நடைபெற்ற டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
Previous Post Next Post