உலக செய்திகள்
- டிசம்பர் மாதம் சீனாவின் செங்டு பகுதியில் இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே Hand – in – Hand (ஹேண்ட் – இன் – ஹேண்ட்) இராணுவப் போர் பயிற்சியின் 7-வது பதிப்பு மீண்டும் தொடங்கவுள்ளது.
- அண்ணா ப்ரன்ஸ்(Anna Burns) என்பவர் தனது மில்க்மேன் என்ற புதினத்திற்காக புனைவுக் கதைகளுக்கான பெருமை மிகு மேன்புக்கர் பரிசினை வென்றுள்ளார்.
தேசிய செய்திகள்
- பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் ஏவுகணை நாயகரான டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு (2018 அக்டோபர் 15) கலாமின் பார்வை – கனவிற்கான தைரியம் என்ற கருத்தின் அடிப்படையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தின் இணைய தளத்தை நாட்டிற்காக அர்பணித்துள்ளார்.
- சுற்றுச்சூழல் மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையமானது (EPCA – Environment Pollution Prevention and Control Authority) தேசியத் தலைநகரான டெல்லி பிராந்தியங்களில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்காக ஒரு தரப்பட்ட பதில் செயல் திட்டத்தை (GRAP – Graded Response Action Plan) செயல்படுத்தத் தொடங்கியது.
- கர்நாடகாவின் பெங்களுருவில் உள்ள கெம்ப் போர்ட் மாலில் இந்தியாவின் முதல் இணைய சங்கேதப் பணத்திற்கான ATM (India’s First Bitcoin ATM) திறக்கப்பட்டுள்ளது.
- துப்புரவு, குடிநீர், சுகாதாரம், குழந்தைகள் நலம், மகப்பேறு ஆரோக்கியம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை சிறப்பான முறையில் செயல்படுத்தியதற்காக நீலகிரி மாவட்டமானது JRD டாடா நினைவு விருதைப் பெற்றுள்ளது.
விளையாட்டு செய்திகள்
- சமூக தொழில் முனைவரான சுஹைல் கு.தாண்டன், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் விளையாட்டு மற்றும் சமூக செயற் சங்க குழுவின் கிராண்ட் விருதினை தனது விளையாட்டு அபிவிருத்திற்கான பங்களிப்பிற்காக வென்றுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- சீனாவில் நகர்புறங்களில் மின்சாரச் செலவினங்களைக் குறைப்பதற்காக தெரு விளக்குகளுக்குப் பதிலாக, மனிதனால் உருவாக்கப்படும் செயற்கைச் சந்திரனை, ஜீசாங் சாட்டிலைட் லாஞ்ச் சென்டரிலிருந்து சீனாவானது 2020ம் ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளது.
முக்கிய தினங்கள்
- தேசிய காவலர் நினைவு தினம் (National Police Commemoration Day-NPCD) – அக்டோபர் 21