உலக செய்திகள்
- ஐக்கிய ராஜ்ஜியத்தை (UK) அடிப்படையாகக் கொண்ட “ஆக்ஸ்பேம் இன்டர்நேஷனல்” (OxFam International) என்ற அறக்கட்டளையானது சமமின்மையை குறைப்பதற்கான உறுதிக் குறியீட்டை வெளியிட்டுள்ளது (Commitment to Reducing Inequality – CRI)
- ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன தரவரிசைகளில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் உலகின் மிகச்சிறந்த புத்தாக்க பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2018 ஆம் ஆண்டிற்கான உணவு மற்றும் விவசாய அமைப்பின் “விஷன் விருது”, (Vision Award) ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பினால் உருவாக்கப்பட்ட “சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர்ப் பெருக்க பொருளாதாரத்தின் (BTEEB – The Economics of Ecosystem and Bio diversity) முன் முயற்சியான “TEEB Agri Food” என்ற முயற்சிக்கு வழங்கப்பட்டது.
தேசிய செய்திகள்
- நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது டாக்டர் சேகர் மண்டே – வை அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் (CSIR – Council of Scientific and Industrial Research) பொது இயக்குநர் மற்றும் அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையின் செயலாளராக (DSIR – Department of Scientific and Research) நியமித்துள்ளது.
- மத்திய தகவல் ஆணையத்தின் (CIC – Central Information Commission) 13வது மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது. இம்மாநாடு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் – ஆல் தொடங்கி வைக்கப்பட்டது
- டெல்லி அரசானது அடுத்த 3 ஆண்டுகளுக்கு சுற்றுச்சூழல், கலாச்சாரம் மற்றும் கல்வி போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு நல்கிட “மாஸ்கோ” அரசுடன் இரட்டை நகர (Twin City Agreement) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கிடையேயான முப்படைகளும் கலந்து கொள்ளும் முதலாவது பயிற்சியானது 2019-ஆம் ஆண்டின் இந்தியாவில் நடைபெற உள்ளது
- ஆசியாவின் மிகப்பெரிய இராணுவ வான்படை கண்காட்சியான “ஏரோ இந்தியா” கண்காட்சியின் 12-வது பதிப்பானது 2019-ஆம் ஆண்டு பெங்களுரில் நடைபெறவிருக்கிறது