உலக செய்திகள்
- இந்தியா, சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையேயான மும்முனை ஒத்துழைப்பின் கீழ் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து முதலாவது கூட்டுத் திட்டமான ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
- சீன விண்வெளி தொழில்நுட்பக் கழகமானது, உலகின் மிகப் பெரிய ஆளில்லா போக்குவரத்து விமானத்தை தயாரித்துள்ளது.
தேசிய செய்திகள்
- தெலுங்கானாவின் வாரங்காலின் எஸ்.ஆர். புத்தாக்க பரிவர்த்தனை (SRix – SR innovative Exchange) வளாகத்தில் இந்தியா மற்றும் UK ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து SRix என்ற விவசாய வணிக நிறுவனத்தைத் தொடங்குகிறது.
விளையாட்டு செய்திகள்
- அர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான வில்வித்தைப் பிரிவில் இந்தியாவின் ஆகாஷ் மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
- மலேசியாவின் ஜோஹோர் பஹ்ருவில் நடைபெற்ற சுல்தான் ஜோஹோர் கோப்பை இளையோர் ஹாக்கி போட்டியில் இந்தியாவானது வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளது.
- இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியானது இந்தியாவை வென்று தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
- இரயில்வே பயணிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு சேவைகளைப் பற்றிய பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக, ஆஸ்க் திஷா (Ask Disha) என்ற பேசும் கருவியை மத்திய இரயில்வே உணவு வழங்குதல் மற்றும் சுற்றுலாக் கழகம் (IRCTC – Indian Railway Catering and Tourism Cooperation) அறிமுகப்படுத்தியுள்ளது.
- இலக்கியத்திற்கான நோபல் பரிசிற்கு மாற்றாக உருவாக்கப்பட்ட இலக்கியத்திற்கான புதிய அகாடமி பரிசானது, கௌதலோப்-ஐச் சேர்ந்த பாரிஸ் காண்டே என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR – National Commission For Protection of Child Rights) புதிய தலைவராக “பிரியங்க் கானூங்கோ” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய தினங்கள்
- சர்சதேச வறுமை ஒழிப்பு தினம் – அக்டோபர் 17 (International Day for the Eradication of Poverty)