உலக செய்திகள்
- ஆட்கடத்தலை தடுப்பதற்காக இலங்கை அரசுக்கு, ஆஸ்திரேலியா உதவி செய்யவுள்ளது. அதன் ஒருபகுதியாக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்துவதற்கான இணைய வழி பயிற்சியை தொடங்க உள்ளது.
- இந்தியா மற்றும் அஜர்பைஜன் (Azerbaijan) நாடுகளுக்கு இடையே வணிகம் மற்றும் பொருளாதாரம்,அறிவியல் & தொழில்நுட்பம் தொடர்பான 5-வது கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது.
தேசிய செய்திகள்
- வேளாண்மை மற்றும் சுகாதாரத் துறையில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காக செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் மைக்ரோசாப்ட் இந்தியா மற்றும் நிதிஆயோக் (NITI Aayog) ஆகிய அமைப்புகளுக்கிடையே கையெழுத்தாகி உள்ளது.
- ஐக்கியநாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF – United Nation’s Children’s Fund) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவை இணைந்து, இந்தியாவை “போலியோ இல்லாத நாடாக”அறிவித்துள்ளது.
- இயற்கை பேரிடரின் போது ஏற்படும் சேதங்கள், வணிகரீதியிலான பாதிப்புகள் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு, ஐ.நா. மன்றம் வெளியிட்டுள்ள, இயற்கை பேரழிவுகள் அதிகம் தாக்கும் நாடுகளில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகியநாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது.
- திருப்பூர் சாய் கிருஷ்ணா நுண்கலைக் கூடத்தின் துணைநிறுவனர் சந்தியா சங்கருக்கு‘நாட்டிய கலா ரத்னா’,‘நாட்டியசிரோமணி’என்ற விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
- அக்டோபர் 21-ல் புதுதில்லியில் நடைபெறவுள்ள “Delhi half – மராத்தான்”போட்டியின்; நல்லெண்ணத் தூதராக அமெரிக்க தடகள வீரர் “சான்யா ரிச்சர்ட்ஸ் ராஸ்”என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் செர்பியவீரர் நோவக் ஜோகோவிச், குரோஷிய வீரர் போர்னாகோரிக்-யை (BornaCoric) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்
முக்கிய செய்திகள்
- உலக தர நிர்ணய தினம் – அக்டோபர் 14 (World Standards Day)