உலக செய்திகள்
- ரயில் பயணிகளுக்கு உதவும் வகையில், ரயில்களின் வருகை, புறப்படும் நேரம், சிறப்பு ரயில்கள், பாதுகாப்பு எண்கள் என பல்வேறு வசதிகளுடன் கூடிய “Rail Partner” செயலியை தெற்கு இரயில்வேயின் வர்த்தகத் துறை அறிமுகம் செய்துள்ளது.
- உலகளாவிய பட்டினி குறியீடு – 2018-ல் (Global Hunger Index) இந்தியாவானது 119 நாடுகளில் 103-வது இடத்தில் உள்ளது.
இந்திய செய்திகள்
- இந்தியா – ஜப்பான் நாடுகளுக்கிடையேயான உறவுகளை பலப்படுத்துவதற்காக, இரு நாடுகளின் பிரதமர்கள் மற்றும் உயர் அதிகாரிள் பங்குபெறும் 13-வது இந்தியா-ஜப்பான் உச்சி மாநாடு அக்டோபர் 28-ஆம் தேதி ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் நடைபெற உள்ளது.
- நீர் மூழ்கிக் கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை சுமந்து சென்று குறிப்பிட்ட இலக்கில் உள்ள கப்பலை தாக்கி அழிக்கும் டெல்டா 4 கிளாஸ் (Delta 4 Class) வகை ஏவுகணையை இரஷ்யா நாடானது வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
- ஐ.நாவின் உணவு, விவசாய அமைப்பு (FAO – Food and Agriculture Organization), வருங்கால உலக கவுன்சில் (WFC – World Future Council) மற்றும் ஆர்கானிக்ஸ் இண்டர்நேஷனல் ஆகியவை இணைந்து வழங்கும் உயரிய விருதான “வருங்கால கொள்கை விருது – 2018” (Future Policy Award) –ஐ இந்தியாவில் உள்ள சிக்கிம் மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
- இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டு போட்டியில், மொத்தம் 43 நாடுகளில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலம் என 72 பதக்கங்களுடன் 9 இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- இந்திய விண்வெளி ஆய்வு மையம் ‘இஸ்ரோ’ சந்திரன் குறித்து ஆய்வு செய்வதற்காக சந்திராயன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் சந்திராயன்-1 திட்டம் வெற்றியைத் தொடர்ந்து சந்திராயன்-2 திட்டம் இஸ்ரோ செயல்படுத்த உள்ளது.
முக்கிய தினங்கள்
- சர்வதேச இயற்கைப் பேரழிவுகள் குறைப்பு நாள் -அக்டோபர் 13 (International Day for National Disaster Reduction)