உலக செய்திகள்
- மாலத்தீவு அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் முகமது சோலிக் வெற்றி பெற்றார்.இதையடுத்து மாலத்தீவின் 7வது அதிபராக பதவியேற்க உள்ளார்.
- பேஸ்புக் நிறுவனத்தின், இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குநராக அஜித் மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இவர் ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் முதன்மை செயலாளராக இருந்து வருகிறார்.
- அண்டை நாடான, சீனாவுடன் முதல் முறையாக, உள்நாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில், இந்தியா கையெழுத்திட உள்ளது.
தேசிய செய்திகள்
- அம்ருத் திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய வீட்டு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ஹைதராபாத்தில் 16 கி.மீ தொலைவுக்கு பயணிக்கும் புதிய மெட்ரோ ரயில் தடத்தை ஆளுநர் நரசிம்மன் தொடங்கி வைத்தார்.
விளையாட்டு செய்திகள்
- சர்வதேச ஏர்போர்ட் கவுன்சில் அறிக்கைப்படி 2017ல் உலக அளவில் அதிக பயணிகளை கையாண்ட விமான நிலையங்கள் பட்டியலில் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையம் 16வது இடம் பெற்றுள்ளது.
- 2018-ம் ஆண்டுக்கான பிபாவிந் சிறந்த கால்பந்து வீரராக குரோஷியாவின் லூகா மாட்ரித் சேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. பிரேசில் வீராங்கனை மார்டா 6-வது முறையாகச் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.