உலக செய்திகள்
- ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையம் (UNHCR-United Nations High Commissioner for Refugees) வழங்கும் நான்சென் அகதிகள் விருது(Nansen Refugee Award) – 2018, தெற்கு சூடானை சேர்ந்த மருத்துவர் இவான் அடர் அதகா அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய நகரங்களுக்கிடையேயான எல்லை பணிக்குழுவின் (BWG – Boundary Working Group) ஐந்தாவது கூட்டம் நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்றுள்ளது.
தேசிய செய்திகள்
- இந்திய ஆயுதப்படைகளின் தைரியம், வீரம், தியாகம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக, செப்டம்பர் 28-30 வரை ‘பாராக்ரம் பர்வ்‘ கொண்டாடப்பட உள்ளது.
- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களால் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் (IISF-2018) நான்காவது பதிப்பு அக்டோபர் 6 ம் தேதி லக்னோ, உத்திரபிரதேசத்தில் தொடங்கிவைக்கப்படவுள்ளது.
- அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் சேவையின் ஒரு பகுதியாக மத்திய நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறையும், தேசிய தகவல் மையமும் இணைந்து “ஜன்தன் தர்ஷக்” எனும் செல்பேசி செயலியை உருவாக்கியுள்ளன.
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ,புவி அறிவியல் & சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மத்திய அமைச்சர், டாக்டர் ஹர்ஷ் வர்தன் காற்று மாசு கட்டுப்பாட்டு ‘WAYU’(Wind Augmentation Purifying Unit) சாதனத்தை தில்லியில் திறந்துவைத்தார்.
வர்த்தக செய்திகள்
- சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்குள் ஒரு கோடி ரூபாய் வரை கடனுக்கான ஒப்புதல் வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
- மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் வழங்கும் உயரிய விருதான ‘ராஷ்ட்ரிய கேல்புரோத்சாஹன் புரஸ்கார்’ எனும் விளையாட்டு மேம்பாடு விருது ஈஷா அவுட்ரீச்க்கு வழங்கப்பட்டுள்ளது.இதையடுத்து விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடந்தது.