RRB Tamil Current Affairs 21st September 2018

உலக செய்திகள்
  1. நிலையான மற்றும் உலகளாவிய அளவில் அணுகக்கூடிய சுற்றுலாத் தன்மையை மேம்படுத்துதலை பணியாகக் கொண்ட UNWTO -இன் (United Nations World Tourism Organization) 7-வது உலகளாவிய நகர்புற சுற்றுலா உச்சி மாநாடு தென்கொரியாவின் தலைநகரான சியோலில் நடைபெற்றது.
  2. ஜப்பான் ஆளுங்கட்சி தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷன்சோ அபே மூன்றாவது முறையாக அந்நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேசிய செய்திகள்  
  1. இந்தியாவின் உள்நாட்டியிலேயே தயாரிக்கப்பட்ட, நிலத்தில் இருந்து ஏவப்படும் குறைந்த தூர தாக்குதல் ஏவுகணை ‘பிரஹார்‘ ஒடிசா கடற்கரையிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
  2. பாலியல் குற்றவாளிகள் பற்றிய தேசிய தரவுத்தளத்தை (NDSO -NATIONAL DATABASE ON SEXUAL OFFENDERS ) மத்திய உள்துறை அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் (WCD) உடன் இணைந்து வெளியிட்டுள்ளது.
  3. ரஷ்ய கூட்டமைப்பின் விமானப்படை மற்றும் இந்திய விமானப்படைக்கு இடையேயான கூட்டு விமான போர் பயிற்சி “அவியாந்திரா -18″ (“Aviaindra-18”) ரஷ்யாவின் லிபட்ஸ்க் நகரில் தொடங்கியுள்ளது.
  4. ஸ்வச் – தாரா(Swatch Dhara) : ஆந்திர பிரதேசம் மாநிலம் முழுவதும் தூய குடிநீரை வழங்கும் நோக்கத்துடன் அம்மாநில அரசானது Swatch – Dhara (ஸ்வச் – தாரா) என்னும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. உயரிய விருதாக கருதப்படும் கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லியும், பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இரங்கல்
  1. வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங் உடல் நலக் குறைவால் மரணம் அடைந்தார்.
முக்கிய தினம்
  1. செப்டம்பர் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் சமாதானத்தின் சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது.
  2. செப்டம்பர் 21 World Peace Day – 2018 (உலக அமைதி தினம் – செப்டம்பர் 21)
Previous Post Next Post