உலக செய்திகள்
- 3வது கொரிய நாடுகளுக்கிடையேயான மாநாடு வடகொரிய தலைநகர் பியாங்கியோங் என்னுமிடத்தில் நடைபெற்றுள்ளது. இம்மாநாட்டில், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் பங்கேற்றுள்ளார். சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு தென் கொரிய அதிபர் வடகொரியா செல்வது இதுவே முதல் முறையாகும்.
- வங்காள தேசத்தில் உள்ள “சிட்டகாங்”, “மோங்லா” ஆகிய துறைமுகங்களை இந்தியா வணிக ரீதியாக பயன்படுத்த அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
தேசிய செய்திகள்
- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் ஆகியோர் இணைந்து 45-வது பிரவாஸி பாரதிய திவாஸிற்கான (PBD – Pravasi Bhartiya Divas) www.pbindia.govt.in என்ற இனையதளத்தை தொடங்கியுள்ளனர்.
- திறமையான கலைஞர்களையும், தொழில் முனைவோரையும் ஊக்குவிக்கும் நோக்கில் திறன் இந்தியா திட்டத்தை 2015ம் ஆண்டு ஜுலை 15ல் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முதல் விண்வெளி தொழில்நுட்ப அடைவு மையத்தினை திரிபுரா தலைநகர் அகர்தலாவில் தொடங்கியுள்ளது.
- உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மனிதர்களால் சுமந்து செல்லக்கூடிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையானது மகாராஷ்டிராவின் அஹமத் நகரில் 2வது முறையாக சோதனை செய்யப்பட்டுள்ளது.