RRB Tamil Current Affairs 19th September 2018

உலக செய்திகள்
  1. அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், முதல்முறையாக வர்த்தக ரீதியாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தில் ஜப்பானிய பில்லியனரான யூசுக்கு மேசவாவை அனுப்ப உள்ளது .
தேசிய செய்திகள்
  1. உத்தரபிரதேசத்தில் தனது தொகுதி யான வாரணாசியில் ரூ.550 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
  2. ஐ.நா. நிலைகள் மற்றும் போக்குகள் குழந்தைகள் இறப்பு -2018 (UN levels and trends in child mortality 2018) அறிக்கைபடி, இந்தியாவில் 5 வயதிற்கு உட்பட்ட 80,2000 குழந்தைகள் 2017 ல் மரணமடைந்துள்ளார் என்றும் சராசரியாக உலகம் முழுவதும் 1000 க்கு 39 குழந்தைகள் 5 வயதிற்கு முன்னதாகவே இறந்து விடுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  3. தென் மாநில மண்டல கவுன்சிலின் 28 வது கூட்டம் மத்திய உள்துறை மந்திரி ஸ்ரீ ராஜ்நாத் சிங்கின் தலைமையின் கீழ் பெங்களூரில் நடைபெற்றது.
  4. திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேவ் இஸ்ரோவின் முதல் விண்வெளி தொழில்நுட்ப ஊடுருவல் மையத்தை திறந்து வைத்தார்.
  5. ‘திறன் இந்தியா‘ திட்டத்தின் துாதர்களாக, பாலிவுட் பிரபலங்கள், வருண், அனுஷ்கா சர்மா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளனர்.
  6. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் சிவப்பு செங்கல் கட்டமைப்பு ‘பசுமை சான்றிதழ்‘-ஐ பெற்றுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. சீனாவில் ஹாங்காங் 2022 ஆம் ஆண்டில் ஆசியப் போட்டிகளின் நான்காவது பதிப்பை வழங்குகின்றது என்று ஆசிய பாராலிம்பிக் குழு (APC) உறுதிப்படுத்தியது.
Previous Post Next Post