இந்திய நிகழ்வுகள்
- 6வது இந்தியா - இங்கிலாந்து நாடுகளுக்கிடையேயான அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு கவுன்சில் (The 6th India – UK Science & Innovation Council(SIC) மாநாடு புது டெல்லியில் நடைபெற்றது.
- அழகு சாதன பொருட்கள் மற்றும் ஃபேஷன் வடிவமைப்பு மற்றம் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பெண்களுக்கு பயிற்சி அளிக்க இந்தியாவில் முதன் முதலாக பெண்களுக்கான முதல் தேசிய திறன் பயிற்சி மையம், பஞ்சாப் மாநிலம் மொஹலியில் தொடங்கப்பட்டுள்ளது. (National Skill Training Institute(NSTI) for women at Mohali, Punjab)
- டெல்லியில் உள்ள டீன் முர்டி பவன் காம்பளக்ஸில் உள்ள நேரு மெமோரியல் மியூசியம் மற்றும் அதில் உள்ள நூலகம் ஆகியவை இணைக்கப்பட்டு, இந்தியாவின் முன்னாள் பிரதம அமைச்சர்களுக்கான அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது.
- இந்தியாவில் முதன் முதலாக வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்து மாநிலத்தில் உள்ள கோஹிமா கல்லூரியில் வாட்டர் ஏடிஎம் (Water ATM) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலக நிகழ்வுகள்
- சர்வதேச அளவில் சுமார் 28 நாடுகளில் நடத்திய ஆய்வின் அடிப்படையில் உடல் உறுப்பு தானம் செய்வோர் பட்டியலில் இந்தியா 74 சதவீதத்துடன் முதலிடத்தைப் பெற்றுள்ளதாக பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த இப்சோஸ் மேரி என்ற நிறுவனம்; தெரிவித்துள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
- சென்னையில் நடைபெற்ற 13-வது உலக ஜுனியர் ஸ்குவாஸ் போட்டியில் எகிப்து அணியானது இங்கிலாந்து அணியை வீழ்த்தி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- இணையதள தேடல் எந்திரமான கூகுள் (Google) நிறுவனம் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அதன் க்ளாவ்டு நெக்ஸ்ட் (Cloud Next - 2018) மாநாட்டில் இரண்டு புதிய செயற்கை நுண்திறன் நுண் சில்லுகளை (Artificial Intelligence (AI) Chip) வெளியிட்டுள்ளது.
- பெய்டோ 3 (Peido - 3) மற்றும் மார்க் 3பி (Mark – 3B) என்னும் இரட்டை செயற்கை கோளை சீனா தனது தொலை தொடர்பு பணிகளுக்காக விண்ணில் செலுத்தியுள்ளது.
- மிஸ் ஆசியா(காது கேளாதவர்) – 2018