RRB Tamil Current Affairs 29th July 2018

இந்திய நிகழ்வுகள்
  1. பிஜினி மித்ரா – செயலி - இராஜஸ்தான் மாநிலத்தில் செயல்பாடற்ற மின்மாற்றிகள் குறித்து புகார் தெரிவிக்க ‘பிஜிலி மித்ரா’ என்ற கைப்பேசி செயலி இராஜஸ்தான் மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  2. இந்திய இராணுவத்திற்காக ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், ‘வி92எஸ்2 ((VS92S2- 1000 குதிரை திறன் உடையது) வி46-6 (V46-6- 780 குதிரை திறன் உடையது) ஆகிய பீரங்கிகளுக்கான இரண்டு வகை என்ஜின்கள் சென்னை ஆவடி என்ஜின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டுள்ளது.
  3. ஆப்பிரிக்காவின் உயர்ந்த மலை சிகரமான (5895 மீட்டர் உயரம்) கிளிமாஞ்சாரோ சிகரத்தில் ஏறி இந்திய மாணவி ‘சிவாங்கி பதக்’ சாதனைப் படைத்துள்ளார்.
  4. பதினெட்டாம் நூற்றாண்டில் மைசூரை ஆட்சி செய்த திப்பு சுல்தான் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சுமார் 1000 ராக்கெட்டுகள், கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் பிதானுரு கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உலக நிகழ்வுகள்
  1. இந்தியா- நேபாளம் இடையேயான சிந்தனையாளர்கள் மாநாடு (India – Nepal Think Tank Summit – 2018) நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் ஜுலை-31 அன்று நடைபெற உள்ளது.
  2. நேபாளத்தைச் சேர்ந்த ஆசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிப்ளோ அண்ட் இண்டர் நேஷனல் அஃபையர்ஸ் அமைப்பும் இந்தியாவின் நேரு நினைவு அருங்காட்சியகமும் இணைந்து இம்மாநாட்டை நடத்துகிறது.
  3. உலகளாவிய இயலாதோர் உச்சி மாநாடு
  4. ஜாங்டரி புயல் - ஜப்பான் நாட்டில் ஜாங்டரி புயல் ஜுலை 29 (நேற்று) தாக்கியது.
விளையாட்டு நிகழ்வுகள்
  1. துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற யாசர் டோகு சர்வதேச மல்யுத்த தொடரில் பெண்களுக்கான 55 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை பிங்கி, உக்ரைனின் ஒல்கா ஷனைடரை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இத்தொடரில் இந்தியா 10 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.
  2. ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெற்ற ரஷ்ய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் வர்மா ஜப்பான் வீரர் கோகி வந்தனாபே-வை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
முக்கிய தினங்கள்
  1. ஜுலை 29 – சர்வதேச புலிகள் தினம்.
Previous Post Next Post