RRB Tamil Current Affairs 21st July 2018

உலக நிகழ்வுகள்
  1. இந்தியாவுக்கான இலங்கை தூதராக ஆஸ்டின் பெர்னாண்டோ என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. இந்தியா மற்றும் கானா இடையே இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.i )பண்பாட்டு பரிவர்த்தனை திட்டம் (Cultural Exchange Programme). ii )இந்திய தர நிர்ணய அமைப்பு மற்றும் கானா தர நிர்ணய அமைப்பு ஆகியவற்றிற்கும் இடையே ஒத்துழைப்பு.
  3. அலுமினியம்: தி ஃபியூச்சர் மெட்டல்(Aluminium : The Future Metal) என்ற புத்தகத்தை ‘தபன் குமார் சந்த்’ என்பவர் எழுதியுள்ளார்.
இந்திய நிகழ்வுகள்
  1. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள மிலிதிகி கிராமத்தில் 2500 ஆண்டுகள் ‘பழைமையான இசை பாறை” கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  2. அசுத்தமான குளம் மற்றும் நதிநீரை சுத்தமான குடிநீராக மாற்றும் சுலாபக் ஜல் என்ற திட்டம் பீகார் மாநிலத்தில் தர்பங்கா மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் உலகிலேயே பீகார் மாநிலம் மிக மலிவான குடிநீரை வழங்கவுள்ளது.
  3. உ.வே. சாமிநாத அய்யர் கருவூலம் என்ற நூல் ஆ.இரா. வேங்கடாசலபதி என்பவரால் எழுதப்பட்டு தமிழக ஆளுநர் ‘பன்வாரிலால் புரோகித்’ என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது
  4. இந்தியா – ஆசியான் கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் “Strengthening India – ASEN Maritime Cooperation” தொடர்பான 10வது டெல்லி உரையாடல் மாநாடு (Delhi Dialogue - X) புதுடெல்லியில் நடைபெற்றது.
  5. குஜராத் கடற்கரையிலுள்ள காம்பாட் வளைகுடாவில் கடல் காற்று வளத்தை மதிப்பீடு செய்வதற்காக LiDAR என்னும் தொலையுணர்வு கருவியை தேசிய காற்று ஆற்றல் நிறுவனம் (National Institute Of wind Energy - NIWE) நிறுவியுள்ளது.
Previous Post Next Post