உலக நிகழ்வுகள்
- ஆயுர்வேதத்திற்கு அறிவியல் மதிப்பீடு கொடுக்கும் வகையில் AIIA மற்றும் IIT Delhi-யும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- 2016-ல் தில்லியில் நடைபெற்ற 6-வது பிரிக்ஸ் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்திலும் ஐ.நா. பொதுச் சபையில் காச நோயை முடிவுக்கு கொண்டு வருவது பற்றிய முதலாவது உயர்நிலைக் கூட்டத்திலும் ஒப்புக் கொண்டபடி காசநோய் ஒத்துழைப்புத் திட்டத்திற்கு இந்தியா முழு ஆதரவு வழங்கும் என்று மத்திய சுகாதாரம் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.
- காச நோயாளிகளுக்கு குறைந்த விலையில் தரமான, பாதுகாப்பான மருந்துகளும், தடுப்பூசி மருந்துகளும் கிடைக்கச் செய்ய வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி 8வது பிரிக்ஸ் சுகாதார அமைச்சர்கள் மாநாடு தென்னாப்பிரிக்காவின் டர்பனில் நடைபெற்றது.
- பல நாடுகள் பங்கேற்கும் பிட்ச் பிளாக் - 2018 போர் ஒத்திகை ஆஸ்திரேலியாவில் ஜூலை 27 முதல் நடைபெற உள்ளது.
இந்திய நிகழ்வுகள்
- தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியருக்கு சென்னை மெரினா கடற்கரையில் சிலை அமைக்கவுள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
- பூமியின் 4200 ஆண்டுகால இயற்கை சூழலை தாங்கிய பழைமையான பாறைபடிமம் மேகாலயாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இ-பிரகதி போர்ட்டல் (e-Pragati Portal) என்னும் சேவை தளத்தை ஆந்திரப் பிரதேச முதல்வர் தொடங்கி உள்ளார்.
- இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையேயான 4வது கடல்சார் தொடர்பான மாநாடு புதுடெல்லி நடைபெற்றது.
நியமனங்கள்
- சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை, உச்சநீதி மன்ற நீதிபதியாக கொலிஜியம் குழு பரிந்துரை செய்;துள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதியான மும்பை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய விஜயா கமலேஷ் தஹில் ரமணி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- Face Book நிறுவனம், “ஆதெனா” (thena) என்னும் பூமியில் இருந்து மிகக் குறைந்த தொலைவில் பயணிக்கும் இணையதள செயற்கைகோளை 2019-தொடக்கத்தில் விண்ணில் செலுத்த உள்ளது.
- ஃபெடார் (FEDAR) என்று பெயரிடப்பட்டுள்ள இயந்திர மனிதர்களை விண்வெளி மையத்தில் சிக்கலான ஆய்வுகளுக்கு பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
- இந்தோனேசியாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய கைப்பந்து அணியின் கேப்டனாக தமிழக வீரர் உக்கரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- மகளிர் உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடர் லண்டனில் இன்று தொடங்குகிறது. பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, தனது முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது.
- இந்தியா உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொள்ளும், பெண்களுக்கான 14வது உலககோப்பை ஹாக்கி தொடர் இலண்டனில் ஜூலை 21ல் தொடங்கி நடைபெற்று வருகிறது.