உலக செய்திகள்
- ஆஸ்திரேலியா சாலைகளில் பாதசாரிகள் கடப்பதற்காக 3D முறையில் கோடுகள் வரையபட்டுள்ளனர்.
- கேரள பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரன் மிசோரம் மாநில கவர்னராக பதவியேற்றுள்ளார்.
- இந்திய பிரதமர் மோடி இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கிடையே உள்ள நல்லுறவை மேம்படுத்தும் வகையில் அந்நாட்டு ஜோகோ விடோதாவை இன்று சந்தித்து பேசினார்.
- சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள ரஷ்யா வீரர் ஷ்காப்லோப், ஜப்பான் விண்வெளி வீரர் நாரஷீஜி கானாய் மற்றும் நாசா விண்வெளி வீரர் ஸ்காட்டிங்கில் ஆகியோர் ரஷ்ய விண்கலம் சோயுஸ் மூலம் பூமிக்கு திரும்புவதாக நாசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிய செய்திகள்
- மத்திய அரசு முன்னாள் ஜனாதிபதிகள் அலுவலக செலவின் படியாக ரூ 1 இலட்சம் வழங்க முடிவு செய்துள்ளது.
- பிரதமர் மோடி முத்ரா திட்டத்தின் மூலம் 12 கோடி பேருக்கு ரூ 6 இலட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
- இந்தியாவின் தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகராக ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பங்கஜ் சரண் நியமிக்கப்பட்டுள்ளார்.
- பிரஞ்சல் பாட்டீஸ் என்ற பார்வையற்ற பெண் ஒருவர் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் மாவட்ட பயிற்சி ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.
வர்த்தக செய்திகள்
- மத்திய அரசுக்கு சொந்தமான என்டிபிசி நிறுவனம் ரூ59 கோடி நான்காம் காலாண்டில் லாபம் ஈட்டியுள்ளது.
- டிவிஎஸ் குழுமத்தின் வீல்ஸ் இந்தியா நிறுவனம் நான்காம் காலாண்டின் லாபம்7 சதவீதம் அதிகரித்துள்ளது.
- நாட்டின் நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதி ரூ 3500 கோடி டாலர் அதிகரிக்கும் என இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
- சீனா மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகளுக்கு இடையில் நடக்கும் வர்த்தக போரை முடிவுக்குக் கொண்டு வர இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்
விளையாட்டு செய்திகள்
- ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டில் டாஸ் போடும் முறையை வழக்கம் போல் செயல்படும் என தெரிவித்துள்ளது.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் போபன்னா ஆகியோர் முதல் சுற்றில் வெற்றிப் பெற்றுள்ளனர்.