தேசிய செய்திகள்
1. சென்னையில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை முறையாகப் பின்பற்றுபவர்களைப் பாராட்டும் வகையில், அவர்களின் வீடுகளில் பச்சை நிற ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
2. அஸ்ஸாமில் அமல்படுத்தப்பட்டு வரும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி), நாடு முழுவதும் நீட்டிக்கும் வகையிலான ‘தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டை’ அறிமுகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
3. ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கிஷ்த்வார் மாவட்டத்தில் மச்சைல் மாதா யாத்திரை பாதுகாப்பு காரணங்கள் கருதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
4. ஒடிசாவின் சண்டிப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை வரம்பில் (ஐடிஆர்) இருந்து விரைவான எதிர்வினை கொண்டு மேற்பரப்பிலிருந்து விண்ணிற்கு செலுத்தப்படும்
விளையாட்டு செய்திகள்
5. பிரேசிலில் அண்மையில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் போது, தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு மீது முறைகேடு புகார்களை கூறிய நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
6. ரஷிய குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் நீரஜ், லவ்லினோ போரோகைன் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். இதில் 69 கிலோ எடை பிரிவில் லவ்லினா ரஷியாவின் அஸ்ஸீன்டா கன்போராவை வீழ்த்தி தங்கம் வென்றார். 57 கிலோ பிரிவில் நீரஜ் ரஷியாவின் மலிகா ஷகிடோவாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.
7. உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 2-வது தங்கப்பதக்கம் வென்றது. மகளிர் 40 கிலோ பிரிவில் அமெரிக்க வீராங்கனையை வீழ்த்தி 15 வயது கோமல் தங்கம் வென்றார். ஏற்கெனவே 65 கிலோ பிரிவில் சோனம் இந்தியாவின் முதல் தங்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.
8. இந்தியாவின் சத்விக்சைராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் உலக சாம்பின்களான லி ஜுன் ஹூய் மற்றும் லியு யூ சென் ஆகியோரின் ‘சீன சுவரை’ மீறி, பாங்காக்கில் நடந்த தாய்லாந்து ஓபன் பூப்பந்து சாம்பியன்ஷிப்பின் ஆண்கள் இரட்டையர் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றனர்.