உலக செய்திகள்
1. இந்தியாவும் யுனைடெட் கிங்டமும் கர்நாடகாவின் தலைநகரான பெங்களுருவில் சுத்தமான காற்றுக்கான புதுமை (IFCA) இரண்டு ஆண்டு கூட்டு முயற்சியைத் தொடங்கின.
தேசிய செய்திகள்
2. தனிநபர்களைப் பயங்கரவாதியாக அடையாளம் கண்டு அவரதுசொத்துக்களைப் பறிமுதல் செய்தவற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத் திருத்த (AVgpV) மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
3. பட்டுத் தொழிலின் வளர்ச்சிக்காக சில்க் சமக்ரா (“Silk Samagra”) என்ற திட்டத்தின் கீழ் சுமார்22கோடி ரூபாய் தமிழகம் பெறவுள்ளது.
4. தேசிய உணவுப் பாதுகாப்புக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில் இந்திய அரசு தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் பைலட் அடிப்படையில் ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
5. அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்யும் ஊதியங்கள் சட்ட மசோதா, மாநிலங்களவையில் நிறைவேறியது.
6. விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) உடன் இணைந்து ஹைதராபாத்தின் முதல் தனியார் விண்வெளி அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
7. முன்னாள் புலனாய்வுப் பணியகத்தின் (Intelligence Bureau – IB) அதிகாரி ஆர்.என்.ரவி நாகாலாந்தின் 20வது ஆளுநராக பதவியேற்றார்.
வர்த்தக செய்திகள்
8. தனிநபர்களுக்கும் SMS களுக்கும் (Small and medium sized enterprises –சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு) மைக்ரோ கிரெடிட் வழங்கும் நோக்கத்துடன் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியை (India Post Payments Bank – IPPB) ஒரு சிறிய நிதி வங்கியாக (Small Finance Bank – SFB) மாற்ற தபால் துறை முடிவு செய்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
9. பேட்மிண்டன் உலக கூட்டமைப்பால் சமீபத்தில் வெளியிடப்பட்ட பெண்கள் ஒற்றையர் தரவரிசையில், இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவால் முறையே 5 வது இடத்தையும் 8வது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டுள்ளனர். தரவரிசையில் ஜப்பானின் அகானே யமகுச்சி முதலிடம் வகிக்கிறார்.
10. ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் எலிஸ் பெர்ரி 1000 ரன்கள் எடுத்து T20 வடிவத்தில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய அரிய மைல்கல்லை எட்டிய முதல் கிரிக்கெட் வீராங்கணை ஆனார்.