உலக செய்திகள்
1. ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை செலுத்தும் புதிய, மிகப்பெரிய அளவிலான ஏவுகணை லாஞ்ச்சரான சூப்பர் லார்ஜ் மல்டிபிள் ராக்கெட் லாஞ்சரை வட கொரியா சோதனை செய்துள்ளது.
2. ஐக்கிய அரபு அமீரகத்தில் பயங்கரவாதத்தை மற்ற நாடுகளுக்கு எதிராக பயன்படுத்தும் நாடுகளை உலக நாடுகள் நிராகரிக்க வேண்டும் என்று இந்தியாவும், பக்ரைனும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
3. கடலுக்குள் இருந்து ஏவப்படும் புலாவா ஏவுகணையை நீர்முழ்கி கப்பல்கள் மூலம் ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
தேசிய செய்திகள்
4. பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் சயீத்’ விருதை அபுதாபி பட்டத்து இளவரசர் முகமதி பின் சயீத் வழங்கினார்.
5. பஹ்ரைன் நாட்டின் மனாமா நகரில் உள்ள 200 ஆண்டுகள் பழைமையான கிருஷ்ணர் கோயில் ரூ.30 கோடியில் புனரமைப்பு செய்யப்படும் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
வர்த்தக செய்திகள்
6. சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உள்ள, ஜி.எஸ்.டி. ரிட்டர்ன் நிலுவைகளை சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அடுத்த ஒரு மாதத்துக்குள் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு செய்திகள்
7. பிரான்சில் நடைபெற்ற புகழ்பெற்ற சைக்கில் மாரத்தான் போட்டியில் இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் அணில் புரி பயண தூரமான 1200 கிலோ மீட்டரை 90 மணி நேரங்கள் தொடர்ந்து தூக்கமின்றி சைக்கிளில் கடந்து சாதனை புரிந்துள்ளார்.
8. போஸ்னியாவில் நடைபெற்ற குன்று போன்ற உயரமான இடத்தில் இருந்து நீர்நிலைகளில் பல்டி அடிக்கும் ‘கிளிஃப் டைவிங்’ என்ற சர்வதேச அளவிலான சாகச போட்டியில் பெண்கள் பிரிவில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரியானான் இஃப்லாந்து என்ற வீராங்கனை தொடர்ந்து 4வது முறையாக ‘ரெட் புல் கிளிஃப் டைவிங்’ பட்டத்தை பெற்றார். இதேபோல் ஆண்கள் பிரிவில் பிரிட் கேரி ஹன்ட், 8வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.
9. சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனையான நோசோமி ஓகுஹாராவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்