நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 25, 2019



உலக செய்திகள் 

1. உலகின் நுரையீரலாக கருதப்படும் அமேசான் காடுகள் பற்றி எரிந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி முதல் பிரேசிலின் அமேசான் காடுகளில் 9,500 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு தீக்கிரையாகி வருகின்றன.

2. அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அபுதாபி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேசிய செய்திகள் 

3. இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நிதி சீர்த்திருத்தம் தொடர்பாக பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

4. கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.

விளையாட்டு செய்திகள் 

5. உலக பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியாவின் சிந்து, சாய்பிரனீத் ஆகியோர் முன்னேறியுள்ளனர். சுவிட்சர்லாந்தில் உள்ள பசல் நகரில், உலக பாட்மிண்டன் சாம்பியன் ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது.


Previous Post Next Post