உலக செய்திகள்
1. உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம் இந்தியாவில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பூடானில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
2. கூகுள் மேப்ஸூக்கு போட்டியாக ஹவாயின் ‘மேப் கிட்’ ஹவாய் கூகுளின் பிரபலமான கூகுள் மேப்ஸூக்கு மாற்றாக மேப் கிட் என்ற சேவையை ஹவாய் தற்போது உருவாக்கி வருகிறது.
தேசிய செய்திகள்
3. காஷ்மீரில் மீண்டும் இணையம், லேண்ட்லைன் சேவை தொடங்கியது. 13 நாட்களுக்கு பின்னர் ஜம்மு, சம்பா, கத்துவா, உதம்பூர், ரேஸி உள்ளிட்ட பகுதிகளில் மொபைல்களுக்கான 2 ஜி இணைய சேவை 13 நாட்களுக்குப் பின் மீண்டும் தொடங்கியது.
4. பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு. தனி நபரை பயங்கரவாதியாக அறிவிக்கச் செய்யும் வகையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்தது. அரசியல் சாசன பிரிவுகள் 14இ, 19இ, 21 ஆகியவற்றுக்கு எதிரானது என்பதால் இந்த சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
5. சந்திரயான்-2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் கடந்த மாதம் 22-ஆம் தேதி சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. சந்திராயன்-2 விண்கலம் செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குவதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
6. உலககோப்பை தொடரில் அசத்திய ஜடேஜாவிற்கு விருது – மத்திய அரசு அறிவிப்பு. 12 உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக் குழு, விளையாட்டு வீரர்களின் பெயர்களை விருதுக்காக பரிந்துரைத்தது. இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா உள்பட 19 விளையாட்டு வீரர்கள் அர்ஜுனா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.