நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 18, 2019






தேசிய செய்திகள் 

1. சமூக ஊடகங்களை பொதுமக்கள் பொறுப்புடன் கையாள வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் தெரிவித்தார்.

2. வரும் 2027 ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என்று ஐ.நா. கணித்துள்ளது. எதிர்வரும் ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறையக்கூடும் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

3. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை இந்தியா ரத்து செய்தது. காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. இந்த நிலையில், ஜம்முவில் கட்டுப்பாடுகள் வேகமாக தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஜம்மு, சம்பா, கதுவா, உதாம்பூர் ஆகிய இடங்களில் 2ஜி மொபைல் இணையதள சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

4. அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தமாட்டோம் என்ற இந்தியாவின் கொள்கை எதிர்காலத்தில் மாறுதலுக்கு உள்ளாகலாம் என்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார்.

விளையாட்டு செய்திகள் 

5. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி வரும் 2021 வரை மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜாம்பவான் கபில்தேவ் தலைமையிலான சிஏசி வெள்ளிக்கிழமை நடைபெற்ற நேர்காணலில் ரவி சாஸ்திரியை மீண்டும் பயிற்சியாளராக தேர்வு செய்தது.

6. இந்திய மல்யுத்த நட்சத்திர வீரர் பஜ்ரங் புனியா நாட்டின் உயர்ந்தபட்ச விளையாட்டு விருதான ராஜிவ் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.




Previous Post Next Post